ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடித்து ஜனவரி 12-ந் தேதி திரைக்கு வந்துள்ள படம் ஜெய்சிம்ஹா. பாலகிருஷ்ணாவுடன் நயன்தாரா, ஹரிப்பிரியா, நடாஷா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் சங்கராந்திக்கு வெளியானது.
ஆந்திரா, தெலுங்கானாவில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியிடப்பட்ட ஜெய்சிம்ஹா ஏ சென்டர்களை விட பி அண்ட் சி சென்டர்களில் பெரிய அளவில் வசூலித்து வருகிறதாம்.
அந்த வகையில், கடந்த 5 நாட்களில் ரூ. 23 கோடி வசூலித்துள்ளதாம். குறிப்பாக, பாலகிருஷ்ணா படங்கள் அதிகமாக வசூலிக்கும் ராயலசீமாவில் ஜெய்சிம்ஹாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். தொடர்ந்து அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால், பாலகிருஷ்ணாவின் வசூல் சாதனை பட பட்டியலில் இந்த படமும் இடம்பிடிக்கும் என்கிறார்கள்.