ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள சினிமாவை பொறுத்தவரை அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலிலும் நூறு கோடி ரூபாயை தாண்டி வசூலித்த படம் என்கிற பட்டியலிலும் மோகன்லால் நடித்த 'புலி முருகன்' படம் தான் முதலிடத்தில் இருக்கிறது.
அதேபோல 'புலி முருகன்' படத்தின் டிரைலர் தான், வெளியான ஒரே மாதத்தில் அதிக பார்வையாளர்களால் (4 மில்லியன்) பார்க்கப்பட்டது என்கிற சாதனையையும் தன்னிடம் தக்கவைத்துக்கொண்டு இருந்தது.
தற்போது இந்த சாதனையை சமீபத்தில் வெளியான நடிகர் ஜெயசூர்யாவின் 'ஆடு-2' படத்தின் டிரைலர் ஓவர்டேக் செய்து முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. ஒரே மாதத்தில் சுமார் 4.6 மில்லியன் பார்வையாளர்கள் இந்த டிரைலரை பார்த்துள்ளனர்.
அந்தவகையில் ஏற்கனவே 3.5 மில்லியன் பார்வையாளர் எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் இருந்த துல்கரின் 'கலி' இப்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.