புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ |
தனது படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நடிப்பதாக மம்முட்டியின் மீது சில நாட்களுக்கு முன்பு கடுமையான விமர்சனங்களை வைத்தார் நடிகை பார்வதி. அதற்கு மம்முட்டி ரசிகர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்து அதுவே ஒரு பிரச்சனையாக மாறி, அந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து மம்முட்டியும் தனது ரசிகர்களுக்கு 'கண்ணியம் காக்கவேண்டும்” என எச்சரித்துள்ளார். இருந்தாலும் பார்வதியின் மீதான கோபம் குறையாத ரசிகர்கள், அவர் மீதான வெறுப்பை வேறு வழியில் நூதனமாக காட்டிவருகின்றனர். அதாவது பிருத்விராஜூடன் பார்வதி ஜோடியாக நடித்து வரும் 'மை ஸ்டோரி' படத்தின் பாடல் வீடியோ ஒன்று டிச-31ஆம் தேதி வெளியானது.
பாடல் நன்றாக இருந்தாலும், பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமானாலும் கூட, இன்னொரு பக்கம் அதிர்ச்சிகரமாக லைக்குகளை விட டிஸ்-லைக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இரண்டே நாட்களில் 66 ஆயிரம் பேர் இந்த வீடியோவை டிஸ்-லைக் செய்துள்ளனர். இது முழுக்க முழுக்க பார்வதி மீதான வெறுப்பின் வெளிப்பாடு என்றே தெரிகிறது.