அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தெலுங்கு சினிமாவில் நேச்சுரல் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நானி. மிடில் கிளாஸ் கதைகளாக தேடிப்பிடித்து நடித்து வரும் அவரது நடிப்பில் 2017ம் ஆண்டில் நின்னுகோரி, நேனு லோக்கல், எம்சிஏ ஆகிய மூன்று படங்களுமே ஹிட் படங்களாக அமைந்தன.
இந்த படங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான மிடில் கிளாஸ் அப்பாயி என்கிற எம்சிஏ படம் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு, அமெரிக்காவிலும் இந்த படம் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் கடந்த சனிக்கிழமையோடு ஒரு மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதேபோல் நானியின் முந்தைய படங்களான நேனு லோக்கல், நின்னுகோரி படங்களும் அமெரிக்கா பாக்ஸ் ஆபீசின் ஒரு மில்லியன் டாலர் பட்டியலில் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.