அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் |
விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படத்தில் அறிமுகமானவர் டில்லி நடிகை சுரபி. அதன்பிறகு வேலையில்லா பட்டதாரி, புகழ் ஆகிய படங்களில் நடித்தவர், தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடங்காதே படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அட்டாக், ஜென்டில்மேன் போன்ற படங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்ததால் இப்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சுரபி.
இதில், அல்லு சிரிசுடன் நடித்துள்ள ஒக்க க்ஷானம் படத்தில் வழக்கமான நாயகியாக இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சுரபி. இந்த படம் டிசம்பர் 28-ந்தேதி வெளியாகிறது. இதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் நடிகையாகி நான்கு ஆண்டுகளில் பத்து படங்களில் நடித்து விட்டேன். ஆனால் முதன்முதலாக இந்த ஒக்க க்ஷானம் படத்தில் எனது திறமை மீது நம்பிக்கை வைத்து பெரிய ரோல் கொடுத்துள்ளனர். அதனால் இந்த படம் என்னை முன்னணி நடிகையாக உயர்த்தும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்கிறார் சுரபி.