ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவில் வெற்றியோ, தோல்வியோ எந்தவிதத்திலும் பாதிக்காத நடிகர் என்றால் அது சாக்லேட் ஹீரோவான குஞ்சாக்கோ போபன் தான். எப்படியும் வருடத்திற்கு ஐந்து படங்களாவது கொடுத்துவிடும் இவருக்கு, இந்த வருடம் என்னவோ மூன்று படங்கள் தான் ரிலீசாகியுள்ளன.
எண்ணிக்கை குறைவு என்றாலும் மூன்று படங்களும் பெயர் சொல்லும் விதமாக அமைந்ததில் குஞ்சாக்கோவுக்கு சந்தோஷமே. இந்த வருடத்தின் இவரது முதல் படமாக பஹத் பாசில் மற்றும் பார்வதியுடன் இணைந்து நடித்த 'டேக் ஆப்' படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் விருதுகளையும் வாரிக் குவித்தது.
அடுத்து வெளியான 'ராமண்டே ஈடன் தோட்டம்' மற்றும் 'வர்னியத்தில் ஆசங்கா' ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தவே செய்தன. என்ன ஒன்று, 'ஆர்டினரி' படத்திற்குப் பிறகு சூப்பர்ஹிட் என சொல்லிக் கொள்ளும்படியாக கடந்த நான்கு வருடங்களாக, அடுத்த ஹிட் படம் ஒன்று குஞ்சாக்கோவுக்கு அமையவில்லை.
வரும் 2018ல் ரிலீஸாகும் விதமாக தற்போது ஐந்து படங்களில் நடித்து வருகிறார் குஞ்சாக்கோ. அதில் ஏதாவது ஒன்றில் சொல்லி அடிப்பார் என எதிர்பார்க்கலாம்.