இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
விஜய் நடித்த பத்ரி படத்தில் தமிழில் அறிமுகமானவர் பூமிகா. அதன்பிறகு ரோஜாக்கூட்டம் படத்தில் நடித்து பிரபலமான அவர் பின்னர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு படங்களில் பிசியான நாயகியாகி விட்டார். 2007ல் திருமணம் செய்து கொண்ட பிறகும் சில படங்களில் நாயகியாக நடித்த அவர், இப்போது கேரக்டர் நடிகையாக உருவெடுத்துள்ளார். மேலும், பல வருடங்களுக்கு முன்பு தங்கர்பச்சான் இயக்கத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடியாக அவர் நடித்த களவாடிய பொழுதுகள் படம் அடுத்த வெள்ளியன்று திரைக்கு வருகிறது.
அதோடு, இந்தியில் வெளியான எம்.எஸ்.தோனி த அன்டோல்டு ஸ்டோரி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த பூமிகா, தற்போது காமோஷி என்ற இந்தி படத்திலும் நடித்து வருபவர், தெலுங்கில் நானி -சாய் பல்லவி நடித்துள்ள எம்சிஏ படத்தில் கதைக்கு திருப்புமுனையான ஒரு வேடத்தில் நடித்திருக்கிறார். அதுதவிர தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார் பூமிகா.