பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்த ஸ்ரேயா அதன்பிறகு இயக்குனர் மஜீத் இயக்கும் டார்ச்லைட் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த படத்தில் விலைமாது வேடம் என்பதால் நடிக்க மறுத்து விட்டார். இப்போது சதா நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், தெலுங்கில் ஏற்கனவே மனம் உள்ளிட்ட சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்துள்ள ஸ்ரேயா, தற்போது மஞ்சு விஷ்ணு நடித்துள்ள காயத்ரி என்ற படத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இரண்டு வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த மோகன்பாபுவும் இந்த படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், ஸ்ரேயாவின் நடிப்பு குறித்து படநாயகன் மஞ்சு விஷ்ணு ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இந்த காயத்ரி படத்தில் ஸ்ரேயா முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார். இதுவரை கொடுக்காத வித்தியாசமான பர்பாமென்ஸை கொடுத்து படத்திற்கு பெரிய பலம் சேர்த்துள்ளார் என்று கூறியிருக்கிறார். இந்த படம் பிப்ரவரி 9-ந்தேதி வெளியாகிறது.