'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நானி நடித்த நேனு லோக்கல், நின்னுகோரி ஆகிய படங்கள் வெற்றி பெற்றதை அடுத்து தற்போது எம்சிஏ என்ற படத்தில் நடித்துள்ளார். அதாவது மிடில் கிளாஸ் அப்பாயி என்ற பெயரில் உருவாகியுள்ள இந்த படம் மிடில் கிளாஸ் இளைஞனின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாகக்கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது.
இந்த படம் குறித்து நானி கூறுகையில், பெரும்பாலும் மீடியம் பட்ஜெட் கதைகளில் மிடில் கிளாஸ் பையனாகவே நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். அந்த மாதிரி படங்களில் நடிக்கும்போதுதான் ரசிகர்களுக்கு என்னை மிகவும் பிடிக்கிறது. அந்த வரிசையில், இந்த எம்சிஏ படமும் ரசிகர்களுக்கு பிடிக்கும். இதற்கு முன்பு எனக்கு ஹிட்டாக அமைந்த நேனு லோக்கல், நின்னுகோரி பட வரிசையில் இந்த படமும் இடம் பிடிக்கும்.
இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். யதார்த்தமான நல்ல நடிகை. அவரது நடிப்பும் பேசப்படும். அதோடு, அவர் நடித்த பிரேமம் படம் பார்த்ததில் இருந்தே அவர் எனக்கு பிடித்தமான நடிகையாகி விட்டார். அதேபோல் இந்த படத்திலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார் என்கிறார்.