'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த செப்டம்பர் மாதம் நிவின்பாலி நடிப்பில் 'நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேள' படம் வெளியானது. ஆஹா, ஓஹோ வெற்றி இல்லையென்றாலும் இந்தப்படம் பாக்ஸ் ஆபீசில் ஹிட் என்றே அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது கேரளாவில் ஓரிரு இடங்களில் வெற்றிகரமாக நூறாவது நாளை தொட்டுள்ளது இந்தப்படம். நிவின்பாலி உள்ளிட்ட படக்குழுவினர் இந்த நூறாவதுநாள் வெற்றிவிழாவை கொண்டாடினார்கள்.
அதேபோல கடந்த அக்டோபர்-27ல் மோகன்லால், விஷால் நடிப்பில் வெளியான வில்லன் படம் ஐம்பதாவது நாளை தொட்டுள்ளது. இதை படத்தின் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர். மோகன்லால், விஷால் இருவரும் வெவ்வேறு படங்களின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளதால் இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.