மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் |
'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்திற்குப் பிறகு பவன் கல்யாண், இயக்குனர் த்ரிவிக்ரம் சீனிவாஸ் மீண்டும் இணைந்துள்ள படம் 'அஞ்ஞாதவாசி'. இப்படத்தில் பவன் கல்யாண் நாயகனாக நடிக்க, கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் தெலுங்கில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் அனிருத்.
இப்படத்தின் இரண்டு பாடல்களான 'பைட்டிக்கொச்சி, காலி வாலுகா' ஆகிய பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி தெலுங்கு ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இன்று இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. தெலுங்கு ரசிகர்கள் குறிப்பாக பவன் கல்யாண் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் டீசராக 'அஞ்ஞாதவாசி' டீசர் உள்ளது.
இந்திய அளவில் தமிழ்ப் படங்களின் டீசர்கள்தான் அதிக லைக்குகள் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளன. தமிழ்ப் படங்களை விட பெரிய வியாபாரத்துடன் இருக்கும் தெலுங்குப் படங்களின் டீசர்கள் இதுவரை பெரிய அளவில் எந்த சாதனையும் படைக்கவில்லை. அதை 'அஞ்ஞாதவாசி' டீசர் மூலம் முறியடித்து புதிய சாதனையைப் படைக்க வேண்டும் என பவன் கல்யாண் ரசிகர்கள் அதிக ஆர்வத்தில் உள்ளனர்.
இன்று வெளியாகும் டீசரைத் தொடர்ந்து 19ம் தேதி படத்தின் மற்ற பாடல்களும் வெளியாக உள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிருத்திற்கு 'அஞ்ஞாதவாசி' தெலுங்கில் சிறப்பான ஒரு அறிமுகமாக அமையப் போகிறது. பொங்கலை முன்னிட்டு 'அஞ்ஞாதவாசி' படம் வெளியாக உள்ளது. 'அத்தாரின்டிக்கி தாரேதி' படத்தின் வசூல் சாதனையை முறியடித்து 'பாகுபலி' அல்லாத படங்களின் வசூலில் 'அஞ்ஞாதவாசி' படம் முறியடிக்கும் என படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.