‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
மோகன்லாலின் மகன் பிரணவ் தற்போது 'ஆதி என்கிற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்தப்படத்தை, 'த்ரிஷ்யம்', 'பாபநாசம்' புகழ் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். படத்தில் வில்லனாக ஜெகபதிபாபு நடிக்க, அதிசயத்திலும் அதிசயமாக முதல் படத்திலேயே பிரணவுக்கு ஜோடியும் இல்லை. அதனால் லவ், டூயட்டும் எதுவுமில்லை.
மோகன்லாலின் சொந்த நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் தான் இந்தப்படத்தை தயாரித்து வருகிறது. இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல சேனல் ஒன்று 6 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றியுள்ளது.
ஜீத்து ஜோசப் வரிசையாக இரண்டு தோல்விப்படங்களை கொடுத்துள்ள நிலையில், ஒரு அறிமுக ஹீரோவின் பட சாட்டிலைட் உரிமை இவ்வளவு தொகைக்கு விற்கப்பட்டுள்ளதை மலையாள திரையுலகில் ஆச்சர்யமாக பேசி வருகிறார்கள்.