'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கில் விக்ரம் குமார் இயக்கிய படம் மனம். நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா, அகில் என தாத்தா, மகன், பேரன்கள் இணைந்து அந்த படத்தில் நடித்தனர். அந்த படத்தின் டப்பிங் பணிகள் நடந்தபோது உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், தனக்கான டப்பிங் பேசி ஆச்சர்யப்படுத்தினார் நாகேஸ்வரராவ்.
அதையடுத்து மீண்டும் நாகார்ஜூனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோ தயாரிப்பில் ஹலோ என்ற படத்தை அவரது இளைய மகன் அகிலை வைத்து இயக்கியிருக்கிறார் விக்ரம் குமார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியான நிலையில், படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படத்தை சில தினங்களுக்கு முன்பு பார்த்த நாகார்ஜூனா படம் சிறப்பாக வந்திருப்பதாக சொல்லி விக்ரம் குமாரை பாராட்டியதோடு, தனது அன்னபூர்ணா ஸ்டுடியோவுக்கு மீண்டும் ஒரு படத்தை இயக்கித்தருமாறம் அவரை கேட்டுக்கொண்டுள்ளாராம்.