பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தற்போது அறிமுக இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கத்தில், மலையாளத்தில் 'ஒடியன்' என்கிற படத்தில் நடித்து வருகிறார் மோகன்லால். பிளாக் மேஜிக்கை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப்படத்தில் ஒடியன் மாணிக்கன் என்கிற கேரக்டரில் நடிக்கும் மோகன்லால் அந்த கேரக்டருக்காக சுமார் 15 கிலோ கணிசமாக குறைத்திருக்கிறார்..
ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் ஆலோசனைப்படி இந்த எடைக்குறைப்பை மேற்கொண்டுள்ள மோகன்லாலுக்கு, சரியான டயட்டை தொடர்ந்து கவனிப்பதற்காகவே 25 பேர் கொண்ட டீம் ஒன்று செயல்பட்டு வருகிறதாம். இந்நிலையில் 'ஒடியன்' படத்தில் மோகன்லாலின் அந்த இளமையான லுக்கை வரும் டிச-13ஆம் தேதி வெளியிட இருக்கிறாராம் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன்.