நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
வேலைக்காரன் படத்தை முடித்துக்கொடுத்துவிட்ட பஹத் பாசில் தற்போது 'ட்ரான்ஸ் மற்றும் கார்பன் ஆகிய படங்களில் மாறி மாறி நடித்து வருகிறார். இதில் கார்பன் படத்தை டைரக்டர் வேணு இயக்குகிறார். இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி நடிப்பில் வெளியாகி 'க்ளைமாக்சில் அதிரவைத்த 'முன்னறியிப்பு' படத்தை இயக்கியவர் தான் இந்த வேணு.
கார்பன் படத்தில் கதாநாயகியாக மம்தா மோகன்தாஸ் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. படத்தில் நடித்துள்ளவர்களின் பாதி முகங்களுடன் பஹத் பாசிலின் முகத்தை இணைத்து போஸ்டரில் இடம்பெறச்செய்துள்ள இயக்குனர் வேணுவின் ஐடியா, இந்தப்படத்தின் கதையிலும் ஏதோ விஷேசம் இருப்பதை சொல்லாமல் சொல்வது போலவே தெரிகிறது.