பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சில படங்களில் கதையின் நாயகனாக, மற்ற படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருபவர் மலையாள நடிகர் அனூப் மேனன். அதிலும் கடந்த ஒரு வருடத்திலேயே மோகன்லாலுடன் 'கனல்', 'முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்', 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' என தொடர்ந்து நண்பர் வேடங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றவர்.
ஆனால் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு வரை இவர் வில்லன் வேடங்களில் தான் நடித்து வந்தார். தற்போது குணச்சித்திர வேடங்கள் அலுப்பு தட்டியுள்ளதால் மீண்டும் வில்லன் வேடங்களை தேட துவங்கியுள்ளாராம். அந்தவகையில் தற்போது 'சாணக்ய தந்திரம்' என்கிற படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் அனூப் மேனன்.