ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த செப்டம்பரில் மலையாளத்தில் திலீப் நடித்த 'ராம்லீலா' படம் வெளியானது. அரசியல் பின்னணியை கதைக்களமாக கொண்டு த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்தப்படம், நடிகை வழக்கில் சிக்கிய திலீப்பின் நெகடிவ் இமேஜையும் தாண்டி சூப்பர் ஹிட்டாகி, 5௦ கோடிக்கும் மேலே வசூலித்தது. இதனால் இந்தப்படத்தின் தெலுங்கு ரீமேக் ரைட்ஸை பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அப்போதே கைப்பற்றினார்.
அதையடுத்து ரவிதேஜாவிடம் இந்தப்படத்தை போட்டுக்காட்ட, அவரை பெரிதாக இந்தப்படம் ஈர்க்கவில்லையாம். இந்தப்படத்தை பார்த்த ராணாவோ, சமீபத்தில், தான் நடித்த அரசியல் படமான 'நேனே ராஜூ நேனே மந்த்ரி' பட சாயலில் இருப்பதாக கூறி ஒதுங்கிக்கொண்டாராம். அடுத்ததாக இளம் நடிகர் நந்தமூரி கல்யாண்ராம் இந்தப்படத்தை பார்த்ததும் அவருக்கு ரொம்பவே பிடித்துப்போய் விட்டதாம். நல்ல இயக்குனர் ஒருவரை தேடிப்பிடித்தபின் இதன் ரீமேக் வேலைகள் துவங்கும் என சொல்லப்படுகிறது.