பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
கடந்த செப்டம்பர் மாதம் நாகசைதன்யா நடிப்பில் வெளியான படம் யுத்தம் சரணம். ஆக்சன் கதையில் உருவான அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லாவண்யா திரிபாதி நடித்திருந்தார். அதன்பிறகு நாக சைதன்யா நடித்து வந்த படம் ஷவ்யாசச்சி. இந்த படத்தின் மாதவனும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், அடுத்த ஆண்டு மார்ச்சில் படம் திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் மாதவனும், நாகசைதன்யாவும் எதிரும் புதிருமான வேடங்களில் நடிக்கிறார்கள். யுத்தம் சரணத்தைப்போன்று இந்த படமும் ஆக்சன் கதையில் உருவாகிறது. இந்த நிலையில், நவம்பர் 23-ந்தேதியான இன்று நாகசைதன்யாவின் பிறந்தநாள் என்பதால், அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நேற்று வெளியிட்டுள்ளனர்.