நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் அறிமுகமாகும் 'ஆதி' என்கிற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.. இந்தப்படத்தில் ஆக்சன் காட்சிகள் நிறைந்துள்ளதாகவும் பக்கா ஆக்சன் படமாக இது உருவாகும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஜீத்து ஜோசப்போ, தனது முந்தைய இரண்டு படங்களின் தோல்விகளால் இந்தப்படத்தை பற்றிய எந்த பில்டப்பும் வெளியாவதை விரும்பவில்லை.
அதனால், “இந்தப்படத்தில் ஆக்சன் காட்சிகள் உண்டுதான். ஆனால் நீங்கள் நினைப்பது போல தமிழ் அல்லது பாலிவுட் ஆக்சன் படம் போல இது இருக்காது. அதேசமயம் ஆக்சனில் கொஞ்சம் புதிய ஐட்டங்களை புகுத்தியுள்ளோம் என்பது உண்மை.. அதனால் நீங்களாக எதையும் பெரிதாக கற்பனை செய்துகொண்டு தியேட்டருக்கு வரவேண்டாம்” என முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்துள்ளார்.