'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சித்தார்த் - ஆண்ட்ரியா நடிப்பில் திரைக்கு வந்த படம் அவள். இந்த படம் ஹாரர் கதையில் உருவானபோதும் கணவன்-மனைவியாக நடித்துள்ள சித்தார்த் - ஆண்ட்ரியாவின் உதட்டு முத்தக்காட்சிகள் படம் முழுக்க இடம்பெற்றதால் ஆங்கில படங்களுக்கு இணையான படமென்று இளைஞர்கள் சான்றிதழ் கொடுத்தனர்.
இப்படி தமிழக இளைஞர்களிடம் வரவேற்பு பெற்ற சித்தார்த்தின் அவள் படம் இன்று ஆந்திரா, தெலுங்கானாவில் கிருஹம் என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கிலும் நேரடியாக எடுக்கப்பட்ட படம் என்பதால் அதிகப்படியான தியேட்டர்களில் கிருஹம் படத்தை வெளியிடுகிறார் சித்தார்த்.