ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கமர்ஷியல் வெற்றியை கணக்கிட்டு படம் இயக்காமல், தேசியவிருது மற்றும் சர்வதேச விருதுகளை குறிவைத்து படம் இயக்குபவர் தான் மலையாள சினிமாவின் முக்கியமான இயக்குனரான டாக்டர் பைஜூ. அதேசமயம் சர்ச்சையான கருத்துக்களை கூறி அடிக்கடி சிக்கலில் சிக்குவது இவரது வழக்கம். ஏற்கனவே இவர் மோகன்லாலிடம் ஒருமுறை கதை சொல்லி, அதை மோகன்லால் நிராகரித்துவிட்டார்.
ஆனால் டாக்டர் பைஜூவோ, ”மோகன்லால் ஒன்றும் சர்வதேச நடிகர் அல்ல. அதனால் என் படத்தில் அவர் நடிக்காததால் நட்டம் எனக்கு இல்லை” என கூறியுள்ளார். ஆனால் மோகன்லாலோ, “டாக்டர் பைஜூவிடம் நான் கேட்பதற்கு நிறைய கேள்விகள் வைத்துள்ளேன். ஆனால் அவரிடம் அவைகளுக்கு விடையில்லை.. என்னிடம் கதை சொல்ல வந்த விஷயத்தை இப்படி சீப் பப்ளிசிட்டி செய்வார் என எதிர்பார்க்கவும் இல்லை” என்றும் சமீபத்தில் ஒரு பேட்டியில் பதில் கூறியுள்ளார் மோகன்லால்.