இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழில் சுதா இயக்கத்தில் மாதவன் - ரித்திகா சிங் நடித்த இறுதிச்சுற்று படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தவர் வெங்கடேஷ். குரு என்ற பெயரில் அந்த படம் வெளியானது. தெலுங்கிலும் சுதா இயக்கியிருந்த அந்த படத்தில் ரித்திகா சிங் மீண்டும் நாயகியாக நடித்தார்.
அந்த படத்தை அடுத்து தற்போது பெயரிடப்படாத இரண்டு படங்களில் நாயகனாக நடிக்கிறார் வெங்டேஷ். இதில் தேஜா இயக்கத்தில் நடிக்கும் படத்தில் நடிக்க காஜல் அகர்வாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், தற்போது கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனியர் ஹீரோக்களுடன் நடிப்பதற்கு அதிகப்படியான சம்பளம் வாங்கி வரும் காஜல், இந்த படத்திற்கும் அதிகமாகவே வாங்கியுள்ளாராம். அதனால் தான் வெங்கடேஷ் உடன் நடிக்க சம்மதம் சொன்னதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 13-ந்தேதியான வெங்கடேஷின் பிறந்த நாள் முதல் தொடங்குகிறது.