ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
முன்னணி இயக்குனராக இருந்தாலும் தனக்குள் ஒளிந்திருக்கும் நடிகனுக்காக அவ்வப்போது சில படங்களிலே போலீஸ் ஆபிசராக இல்லையென்றால் இயக்குனராக சின்னச்சின்ன வேடங்களில் தலை காட்டுவார் கௌதம் மேனன். அவரது நடிக்கும் ஆசைக்கு எல்லை அவ்வளவுதான். ஆனால் அவரது சொந்த ஊரான மலையாளத்தில் இதுவரை நடித்திராத கௌதம் மேனன், தற்போது 'நாம்' என்கிற மலையாள படத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குனர் ஜோஷி தாமஸ் இயக்கியுள்ள இந்தப்படத்திலும் அவர் இயக்குனர் கௌதம் மேனனாகவே நடித்திருக்கிறார். ஏற்கனவே 'ஜேக்கப்பிண்டே சுவர்க்க ராஜ்யம்' படத்தில் நிவின்பாலியின் தந்தையாக நடிக்கும் வாய்ப்பு அவரை தேடிவந்தது. ஆனால் படப்பிடிப்பு முழுதும் வெளிநாட்டில் நடந்ததால் அதில் கௌதம் மேனன் நடிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.