‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
'பெங்களூர் டேய்ஸ்' புகழ் அஞ்சலி மேனன் தற்போது தனது புதிய படத்தின் படப்பிடிப்பை ஊட்டியில் நடத்தி வருகிறார். பிருத்விராஜ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் பார்வதி, நஸ்ரியா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
திருமணத்திற்குப்பின் நஸ்ரியா மீண்டும் நடிக்கும் படம் இது. ஏற்கனவே பிருத்விராஜின் ஜோடியாக 'என்னு நிண்டே மொய்தீன்', 'மை ஸ்டோரி' என இரண்டு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் பார்வதி. அதனால் இந்தப்படத்தில் அனேகமாக நஸ்ரியா தான் பிருத்விராஜூக்கு ஜோடியாக இருப்பார் என சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் இந்தப்படத்திலும் அவருக்கு ஜோடி பார்வதி தானாம். நஸ்ரியா பிருத்விராஜூக்கு தங்கையாக நடிக்கிறாராம். பாசமான அண்ணன், அழகான பாய் பிரண்ட் இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தவுள்ளாராம் பிருத்விராஜ்.