ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை அனுஷ்காவுக்கு இன்று பிறந்தநாள். தனது 36வது வயதில் அடியெடுத்து வைக்கும் அனுஷ்காவிற்கான பிறந்தநாள் வாழ்த்துக்களால் சோஷியல் மீடியாவே நிரம்பி வழிகிறது. அவரது பிறந்தநாள் பரிசாக அவர் தற்போது நடித்துவரும் 'பாக்மதி' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். இன்னொரு விசேஷமாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் அனுஷ்காவுடன் சேர்ந்து கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
பாக்மதி படத்தில் அனுஷ்காவின் ஜோடியாக நடித்துவரும் இவர், அனுஷ்காவுடன் நல்ல நட்பில் இருப்பவர்.. சில மாதங்களுக்கு முன் அனுஷ்கா கேரளாவில் உள்ள கோவில்களுக்கு தரிசனம் செய்யவந்தபோது தனது உதவிக்கு உன்னிமுகுந்தனைத்தான் அழைத்துக்கொண்டு சுற்றிபார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.