மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் பிருத்விராஜ் மலையாளத்தில் தற்போது 'விமானம்' என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகின்ற கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகும் இந்தப்படம் காது கேளாத, வாய் பேச முடியாத, ஆனால் ஒரு விமானத்தையே தயாரித்த ஒரு இளைஞனின் உண்மைக் கதையாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தை பத்திரிகையாளர் பிரதீப் நாயர் இயக்கியுள்ளார்.
'விமானம்' பட ஷூட்டிங் நேற்று முடிவடைந்த, நிலையில் இந்த இருவரும் கூட்டணி சேர்ந்து தங்களது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். படத்தின் பெயர் 'மீட்டர் கேஜ் 1904'. ரயில்வேயை மையப்படுத்தி உருவாகும் இந்தப்படத்தில் இன்ஜீனியராக நடிக்க இருக்கிறார் பிருத்விராஜ். முதல் படம் விமானம். இரண்டாவது படம் ரயில் சம்பந்தப்பட்ட கதை.. எப்படி அமைகிறது பாருங்கள் பிருத்விராஜூக்கு.