ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அதையடுத்து தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் மகாநதி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதோடு, தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற 100 % காதல் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் ஜி.வி.பிரகாசுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கில் சர்வானந்த் நாயகனாக நடிக்கும் ஒரு கேங்ஸ்டர் படத்தில் நடிக்கிறார் ஷாலினி பாண்டே. சுதீர் வர்மா இயக்கும் இந்த படத்தில் அதிரடி ஆக்சன் ஹீரோவாக உருவெடுக்கிறார் சர்வானந்த். கேங்ஸ்டர் பின்னணி கதையை கொண்ட இந்த படத்தில் காதலும் முக்கியத்துவம் பெறுகிறதாம். அதனால் ரொமான்ஸ் காட்சிகளும் அதிகப்படியான உள்ளதாம்.