ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த வருடம் மோகன்லால் நடிப்பில் 'புலி முருகன்' என்கிற பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் வைசாக். அடுத்ததாக மம்முட்டி நடிப்பில் தான் ஏற்கனவே இயக்கிய 'போக்கிரி ராஜா' படத்தின் இரண்டாம் பாகமான 'ராஜா-2'வை இயக்குவதாக இருந்தார். ஆனால் அதில் மம்முட்டியுடன் பிருத்விராஜூம் இணைந்து நடிப்பார் என்பதால் இருவரின் தேதிகளும் ஒன்றாக கிடைப்பதில் சிக்கல் எழுந்தது..
அதனால் அதற்குள் இன்னொரு படம் இயக்கிவிடலாம் என முடிவு செய்த வைசாக், தனது அடுத்த படத்தில் நிவின்பாலியை வைத்து இயக்க முடிவெடுத்துவிட்டாராம். இவருடன் 'புலி முருகன், 'போக்கிரி ராஜா' படங்களில் இணைந்த பணியாற்றிய கதாசிரியர் உதயகிருஷ்ணா இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.