பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மறைந்த நடிகரும், ஆந்திர முதல்வருமான என்.டி.ஆரின் வாழ்க்கை கதையில் உருவாகும் படம் லட்சுமியின் என்டிஆர். சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இயக்கும் இந்த படத்தில் என்டிஆரின் மகனான பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார். மேலும், இந்த படத்திற்கு லட்சுமியின் என்டிஆர் என்ற தலைப்பில் முதல் தோற்றம் வெளியிடப்பட்டபோது அதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார் பாலகிருஷ்ணா.
இருப்பினும் என்டிஆரின் வாழ்க்கையில் லட்சுமி பார்வதி சென்றதில் இருந்தே கதை தொடங்குவதாக சொல்லி அவரை சமாதானம் செய்தார் ராம்கோபால்வர்மா. இந்த நிலையில், தற்போது லட்சுமி பார்வதி, அந்த படம் குறித்து ராம்கோபால் வர்மாவுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், என்டிஆரின் வாழ்க்கை கதையில் உருவாகும் படத்தை வரவேற்கிறேன். அதேசமயம், அதில் உண்மை அல்லாத விசயங்களை திரித்து வெளியிட்டால், நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.