ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மோகன்லால் நடித்த மிகச்சிறந்த பத்து படங்களை மட்டும் பட்டியலிட்டால் அதில் 2௦ வருடங்களுக்கு முன் வெளியான மோகன்லாலின் 'ஸ்படிகம்' கட்டாயம் இடம்பெறும். அந்தப்படத்தை இயக்கிய பெருமைக்குரிய இயக்குனர் பத்ரன், தற்போது 12 வருடங்களுக்கு பிறகு மோகன்லாலை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். ஒரு கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகவுள்ள இந்தப்படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்..
பழசிராஜா படம் மூலம் மலையாள ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமான சரத்குமார், தொடர்ந்து நான்கைந்து மலையாளப்படங்களில் நடித்தார். அதில் கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்கிற படம் மிக முக்கியமானது. காரணம் மோகன்லால், சுரேஷ்கோபி, திலீப் என மூன்று முன்னணி ஹீரோக்களும் நடித்த அந்தப்படத்தில் மோகன்லாலின் மும்பை நண்பராக மிக முக்கியமான அசத்தாலான கேரக்டரில் நடித்திருந்தார் சரத்குமார். அந்தப்படத்தை தொடர்ந்து ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் இப்போது மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.