ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நின்னுகோரி படத்தை அடுத்து எம்சிஏ, கிருஷ்ணார்ஜூனா யுத்தம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் நானி. இதில் வேணு ஸ்ரீராம் இயக்கும் மிடில் கிளாஸ் அப்பாயி என்கிற எம்சிஏ படத்தில் மிடில் கிளாஸ் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரேமம் சாய் பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தை ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கயிருக்கும் இந்தியன்-2 படத்தை தயாரிக்கயிருக்கும் தில்ராஜூ தயாரித்து வருகிறார்.
மேலும், கிராமத்து கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாய் பல்லவிக்கும் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கும் இந்த எம்சிஏ படத்தின் பர்ஸ்ட் லுக் தீபாவளிக்கு வெளியாகியுள்ளது. அதில் லுங்கி -டீசர்ட் அணிந்த நிலையில் கையில் பால் பாக்கெட்டுடன் நானி நடந்து வருவது போன்ற காட்சி இடம்பெற்றிருக்கிறது.