தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கடந்த மாதம் வெளியான 'ஆடம் ஜான்' படத்தை தொடர்ந்து தற்போது பிருத்விராஜ் நடித்துவரும் படமான 'விமானம்' ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் நவ-1௦ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கமர்ஷியல் படமாக இது உருவாகிறது.
சில வருடங்களுக்கு முன் கேரளாவில் பரப்பரப்பான செய்திகளில் இடம்பிடித்தவர் தான் ஷாஜி தாமஸ். வாய் பேசமுடியாத, கேட்கும் திறனையும் இழந்த, ஏழாம் வகுப்போடு தனது பள்ளிப்படிப்பை கைவிட்ட இந்த ஷாஜி என்பவர் தனது விடாமுயற்சியால் மரக்கட்டைகளையும் பைக் இஞ்சினையும் வைத்து விமானம் ஒன்றை உருவாக்கி பறக்கவைத்தார்.
அந்த ஷாஜியின் கதைதான் இப்போது பிருத்விராஜின் 'விமானம்' படமாக உருவாகி வருகிறது. ஷாஜி கேரக்டரில் தான் பிருத்விராஜ் நடிக்கிறார். இந்தப்படத்தை எழுத்தாளர் பிரதீப் எம்.நாயர் என்பவர் இயக்கியுள்ளார். துர்கா கிருஷ்ணா என்பவர் இதில் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இதே கதையை தழுவி, இந்தப்படத்திற்கு போட்டியாக எடுக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் வெளியான வினீத் சீனிவாசன் நடித்த 'எபி' படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்தநிலையில் பிருத்விராஜின் 'விமானம்' நிச்சயமாக உயரே பறக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் 'விமானம்' படக்குழுவினர்..
இந்த படத்தில் நடித்துள்ள பிருத்விராஜ் வெறுமனே விமானத்தை உருவாகும் விஞ்ஞானியாக மட்டும் இல்லாமல், சில காட்சிகளில் சிறிய ரக பிளைட்டையும் ஓட்டவேண்டி இருந்ததால் தமிழ்நாட்டில் அம்பாசமுத்திரம் என்கிற ஊரில் உள்ள முன்னாள் பைலட் எஸ்.கே.ஜே நாயர் என்பவரிடம் விமானம் ஓட்டுவது குறித்து பயிற்சிபெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது