நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா, தமிழில் ஒரு முக்கியமான இயக்குனர். எப்படி என்கிறீர்களா..? ஹிட் படங்களை இயக்காவிட்டாலும் கூட, தமிழ் சினிமாவுக்கு ஸ்ரேயா, தமன்னா, இலியானா என நான்கு ஹீரோயின்களை அடையாளம் காட்டியவர். அதுமட்டுமல்ல தனது சின்னவயதிலேயே அதாவது இருபது வருடங்களுக்கு முன்பே கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ஹிட் படமான 'நட்புக்காக' படத்தின் கதையை எழுதியதும் இவர் தான்.
தமிழில் உனக்கு 20 எனக்கு 18, கேடி, ஊ லலலா ஆகிய படங்களை இயக்கிய இவர், ஐந்து வருட இடைவெளிக்குப்பிறகு தற்போது தெலுங்கில் 'ஆக்சிஜன்' என்கிற படத்தை இயக்கியுள்ளார். கோபிசந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்தப்படத்தில் துப்பறிவாளன் நாயகி அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் ரிலீசாக இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஒரு வித்தியாசத்திற்காக நெல்லூரில் வரும் அக்-15ல் நடத்த இருக்கிறார்கள். இந்தப்படத்தை ஏ.எம்.ரத்னம் தனது மருமகள் ஐஸ்வர்யாவுடன் இணைந்து தயாரித்துள்ளார். இந்தப்படத்தின் வெற்றியைத்தான் ஜோதிகிருஷ்ணா ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறாராம்.