‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
வயது ஏற ஏற ஆக்சன் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் மோகன்லால் என்பதைத்தான் அவரது அடுத்தடுத்த படங்கள் தெளிவாக சொல்கின்றன. 'புலி முருகன்' படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னுடன் இணைந்து சண்டைப்பிரியர்களுக்கு விருந்துவைத்த மோகன்லால், அடுத்தததாக பி.உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் 'வில்லன்' படத்திலும் சண்டைக்காட்சிகளில் மாஸ் காட்டியுள்ளாராம். குறிப்பாக இதில் நடிகர் விஷாலும் முக்கியமான வேடத்தில் நடிப்பதால், நான்கு ஆக்சன் இயக்குனர்களை வைத்து படத்தின் சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளாராம் இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன்.
மகதீரா, மிர்ச்சி, சரொனைடு ஆகிய படங்களில் சண்டைக்காட்சிகளில் பிரமிக்க வைத்த இரட்டையர்களான ராம்-லக்ஸ்மன், ஷாருக்கானின் ராய்ஸ், ராம்சரணின் துருவா, விக்ரமின் இருமுகன் ஆகிய படங்களில் சண்டைக்காட்சிகளை வடிவமைத்த ரவிவர்மா, தமிழில் புதிய பாணியில் படமாக்கப்பட்டு ரசிகர்களை கவர்ந்த 'துருவங்கள் பதினாறு' படத்தில் பணியாற்றிய ஜி என நான்கு ஆக்சன் இயக்குனர்கள் இந்தப்படத்தில் சண்டைக்காட்சிகளை போட்டிபோட்டுக்கொண்டு வடிவமைத்துள்ளார்களாம். இந்தப்படம் வரும் அக்-27ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப்படத்தில் ஹன்ஷிகா, ராசி கன்னா, மஞ்சு வாரியார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.