கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கத்தில் உருவாகயிருக்கும் படம் லட்சுமியின் என்.டி.ஆர்., தெலுங்கு நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தில் என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணா நாயகனாக நடிப்பதாக ஏற்கனவே ராம் கோபால் வர்மா தனது இணையபக்கத்தில் தகவல் வெளியிட்டிருந்தார். அதோடு, படத்தின் பர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டார்.
இந்த நேரத்தில், அந்த படத்தில் என்.டி.ஆர் வேடத்தில், பிரகாஷ்ராஜ் நடிப்பதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் பரவியுள்ளன. ஆனால், லட்சுமியின் என்.டி.ஆர் படத்தில் பாலகிருஷ்ணா நடிப்பது மட்டுமே முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடக்கிறது. முக்கியமாக, என்டிஆர் வேடத்தில் பாலகிருஷ்ணா தான் நடிக்கிறார். அதனால் என்டிஆராக பிரகாஷ்ராஜ் நடிப்பதாக வெளியான செய்தி வதந்தி என்று உடனடியாக மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார் ராம் கோபால்வர்மா.