ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கேரளாவில் டிவி சேனல் தொகுப்பாளர்களில் ரொம்பவே பாபுலரானவர் தான் ரமேஷ் பிஷரோடி.. இவர் கடந்த சில வருடங்களாக நடிகர் முகேஷுடன் இணைந்து நடத்தி வரும் 'படாய் பங்களா' நிகழ்ச்சி கேரள ரசிகர்களிடையே ரொம்பவே பிரசித்தம். ஸ்டேன்ட் அப் காமெடியனாக சின்னத்திரையில் நுழைந்த ரமேஷ் பிஷரோடி அடுத்தடுத்து, நிகழ்ச்சி தொகுப்பாளர், சின்னத்திரை நடிகர் என உருமாறியவர் கடந்த பத்து வருடங்களாக சினிமாவிலும் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வருகிறார்.
மலையாள சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடனும் உரிமையுடன் நட்பு பாராட்டும் இவர், தற்போது தனது நீண்ட நாள் கனவான டைரக்சன் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். இவர் முதன்முதலாக இயக்கவுள்ள படத்திற்கு 'பஞ்சவர்ண தாத்தா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜெயராம், குஞ்சாக்கோ போபன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இதில் ஜெயராமுடன் இணைந்து ஏற்கனவே ஆடுபுலியாட்டம், அச்சாயன்ஸ் ஆகிய படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார் இந்த ரமேஷ் பிஷரோடி.