பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
டாக்டர் ராஜசேகர் நடித்துள்ள தெலுக்கு படம் பிஸ்வி கருடவேகா 126.18எம். பூஜா குமார் ராஜசேகர் ஜோடியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர கிஷோர், ஸ்ரத்தா தாஸ், சஞ்சய் ரெட்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ஸ்ரீசரன் பகலா இசை அமைத்துள்ளார். அன்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். நீலப்பட நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார்.
இதில் டாக்டர் ராஜசேகர் என்.ஐ.ஏ பாதுகாப்பு அதிகாரியாக நடித்துள்ளார். அவரது உயர் அதிகாரியாக நாசர் நடித்துள்ளார், ஸ்ரத்தா தொலைக்காட்சி நிருபராக நடித்துள்ளர். சாயாஜி ஷிண்டே அமைச்சராகவும், கிஷோர் வில்லனாகவும் நடித்துள்ளனர். இந்தியா விண்ணில் ஏவ இருக்கும் முக்கியமான ராக்கெட் ஒன்றை சில வெளிநாட்டு சக்திகள், உள்ளூர் சக்திகளின் உதவியோடு தகர்க்க திட்டமிடுவதும் அந்த திட்டத்தை ராஜசேகர் முறியடிப்பதுமான கதை. டாக்டர் ராஜசேகர் படங்களிலேயே அதிக பொருட் செலவில் தயாராகி உள்ள படம். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் வருகிற நவம்பர் 3ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் டப் செய்து வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.