பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மோகன்லால் தற்போது 'ஒடியன்' என்கிற படத்தில் நடித்துவருகிறார். விளம்பரப் படங்களை இயக்கிய அனுபவம் வாய்ந்த ஸ்ரீகுமார் மேனன் என்பவர் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். பிளாக் மேஜிக்கை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் பிரகாஷ்ராஜ். நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த ஒடியன்' படத்திற்காக ஏற்கனவே கோழிக்கோட்டிலும் வாரணாசியிலும் இரண்டு கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பை பாலக்காட்டில் நடத்தி முடித்துள்ளார்கள்
இதை தொடர்ந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. இதில் க்ளைமாக்ஸ் காட்சியை மட்டும் தான் படமாக்க இருக்கிறார்கள். இதற்கே கிட்டத்தட்ட 25 நாட்களை ஒதுக்கி, மிக பிரமாண்டமாக எடுக்க இருக்கிறார்களாம். இந்தப்படத்தில் பிளாக் மேஜிசியனாக நடிக்கும் மோகன்லாலுக்கு படம் முழுவதும் ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கின்றன. குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் 'புலி முருகன்' படம்போலவே பிரமிக்க வைக்கும் சண்டை காட்சிகள் இதிலும் இடம்பெறுவதால், ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னின் முழு மேற்பார்வையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.