ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரேமம் படத்தில் நடித்த அனுபவமா பரமேஸ்வரன், அந்த படத்தின் தெலுங்கு பதிப்பிலும் அதே வேடத்தில் நடித்தார். அதையடுத்து தனுஷின் கொடி படம் மூலம் தமிழுக்கு வந்தார். ஆனால் அதன்பிறகு சரியான படங்கள் அமையவில்லை. ஆனபோதும், தெலுங்கு, கன்னடம் என நடிக்கத் தொடங்கி விட்டார். அந்த வகையில், இப்போது மலையாளத்தில் எந்த புதிய படத்திலும் நடிக்காத அனுபமா, தெலுங்கில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.
அந்தவகையில், ஆயுஷ்மன் பவ, கிருஷ்ணார்ஜூனா யுத்தம், செளயாஷி, வேட்ட காடு ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார். மேலும், நானி, நாகசைதன்யா என தெலுங்கில் பிரபல நடிகர்களுடன் நடித்தபோதும், பாடல் காட்சிகளில் கூட கிளாமரில் லிமிட் தாண்டாமல் நடித்து தனது குடும்ப இமேஜை காப்பாற்றிக் கொண்டு வருகிறாராம் அனுபமா பரமேஸ்வரன்.