'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தனது டுவிட்டரில் அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சை இயக்குனர் என பெயரெடுத்துள்ள ராம் கோபால் வர்மா, சமீபகாலமாக அடக்கவாசித்து வருகிறார். அதோடு, தெலுங்கில் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் லட்சுமியின் என்டிஆர் படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். இந்த படத்தில் என்டிஆரின் மகனான பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தை அடுத்து நாகார்ஜூனாவை வைத்து ஒரு ஆக்சன் படத்தை இயக்கப்போவதாக தெரிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இதற்கு முன்பு நாகார்ஜூனாவை வைத்து 1990-ல் ஷிவா, 1993-ல் கோவிந்தா கோவிந்தா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா. அந்த வகையில், 25 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இணையப்போகிறார்கள். இந்த படம் அடுத்த ஆண்டு தொடங்குகிறதாம்.