ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நாயகனாக நடித்த முகமூடி படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்திக்கு சென்றார். முதல்படமே ஹிருத்திக் ரோஷன் உடன் மொகஞ்சதரோ படம் அமைந்தது. இப்படம் தோல்வி அடைய, தற்போது தெலுங்கில் முகாமிட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜூனின் டிஜே படத்தில் நடித்தவர், அடுத்து வேறு படங்கள் எதுவும் இல்லாததால் தற்போது ராம்சரண் நடித்து வரும் ரங்கஸ்தலம் என்ற படத்தில் ஒரு அயிட்டம் பாடலில் நடனமாடுகிறார். இந்த படத்தில் சமந்தா நாயகியாக நடிக்கிறார். ஆனால், அவர் சமீபகாலமாக கிளாமராக நடிப்பதை தவிர்த்து வருவதால், இளவட்ட ரசிகர்களை கருத்தில் கொண்டு ராம்சரணுடன் ஒரு பாடலில் பூஜா ஹெக்டேவை கவர்ச்சி நடனமாட வைக்கிறார்களாம்.
1980-களில் நடக்கும் கதையில் உருவாகும் இந்த படம் கடலோர ஆந்திர கிராமத்தில் பணக்கார பெண்ணுக்கும், ஏழை இளைஞனுக்குமிடையே நடக்கும் காதல் கதையில் உருவாகிறதாம்.