சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் |
ஹீரோயின்களை மையப்படுத்திய கதைகளாகவே மஞ்சு வாரியரை தேடி வருகின்றன. அந்தவகையில் 'உதாகரணம் சுஜாதா' என்கிற படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தை பேந்தம் பிரவீண் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் ஒரு டீனேஜ் பெண்ணுக்கு அம்மாவாக சுஜாதா என்கிற கேரக்டரில் நடிக்கும் மஞ்சு வாரியர், யாரிடம் எது பேசினாலும் ஏதாவது உதாரணம் ஒன்றை சொல்லித்தான் பேசவே ஆரம்பிப்பாராம். அதற்காகவே இப்படி ஒரு டைட்டில் வைத்து விட்டர்களாம்.
இந்தப்படத்தில் மஞ்சு வாரியர் மட்டுமல்லாமல், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மம்தா மோகன்தாஸ். இந்தப்படம் தமிழில் அமலாபால் நடிப்பில் வெளியான அம்மா கணக்கு படத்தின் ரீமேக் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. அமலாபால் கேரக்டரில் தான் மஞ்சு வாரியர் நடித்துள்ளாராம்.
டாக்டராக ரேவதி நடித்த கேரக்டரை, கலெக்டராக மாற்றி மம்தா மோகன்தாஸை நடிக்க வைத்துள்ளார்களாம். ஆனால் படக்குழுவினரோ இது ரீமேக் தான் என்கிற மாதிரியான தகவலை இதுவரை எந்த இடத்திலும் வெளிப்படுத்தவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் செப்-29ஆம் தேதி இந்தப்படம் ரிலீஸாகிறது.