வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
தமிழில் தான் ராய் லட்சுமியை கவர்ச்சியான வேடங்களில் கருவேப்பிலை மாதிரி பயன்படுத்துகிறார்களே தவிர, மலையாள திரையுலகம் அவருக்கான அங்கீகாரத்தையும் முக்கியத்துவத்தையும் எப்போதுமே தர தவறியதே இல்லை. அதிலும் மம்முட்டி, மோகன்லால் இருவரின் படங்களில் அவர் நடிப்பதை பார்க்கும் ரசிகர்கள், இந்த இருவருக்கும் பொருத்தமான ஜோடி இவரை தவிர யாரும் இருக்க முடியாது என்றே சொல்கிறார்கள். அதிலும் மம்முட்டிக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி தான் 'அண்ணன் தம்பி, பருந்து', 'சட்டம்பி நாடு', 'ராஜாதி ராஜா' என நான்கு படங்களில் அடுத்தடுத்து இவர்களை ஜோடி சேர்த்தது.
இப்போது ஐந்தாவது முறையாக மம்முட்டியும் ராய் லட்சுமியும் மீண்டும் ஜோடி சேர்கிறார்கள். பிரபல கதாசிரியரான சேது இயக்குனராக அறிமுகமாகும் 'கோழி தங்கச்சன்' படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடிக்க உள்ளார் ராய் லட்சுமி. மூன்று கதாநாயகிகள் கொண்ட இந்தப்படத்தில் ஏற்கனவே அனு சித்தாரா, தீப்தி சதி என இரண்டு கதாநாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.