ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குனர் சமுத்திரக்கனி 'ஒப்பம்', 'கரிங்குன்னம் சிக்சஸ்' படங்களின் மூலம் ஒரு நல்ல நடிகராக மலையாள ரசிகர்களின் மனதில் பதிந்துவிட்டார். தற்போது 'ஆகாச மிட்டாயி' படத்தின் மூலம் ஒரு இயக்குனராகவும் மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழில் வெற்றிபெற்ற, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற படம் தான் சமுத்திரக்கனியின் இயக்கத்தில் உருவான 'அப்பா' படம் தான் இப்போது மலையாளத்தில் 'ஆகாச மிட்டாயி' என்கிற பெயரில் ரீமேக்காகியுள்ளது.. படத்தின் கதாநாயகனாக சமுத்திரகனி நடித்த ரோலில் ஜெயராம் நடித்துள்ளார்.
கதாநாயகியாக இனியா நடித்துள்ளார். தம்பி ராமையா கேரக்டரில் கலாபவன் சாஜன் நடித்துள்ளார். இந்தப்படத்தை கடந்த ஓணம் பண்டிகை அன்றே ரிலீஸ் செய்வதற்கான முயற்சிகள் நடந்தன.. ஆனால் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் இந்த ஓணம் பண்டிகையில் ரிலீசானதால், ரிலீஸ் ரேஸில் இருந்து பின் வாங்கினார்கள்.. இப்போது அக்-6ஆம் தேதி 'ஆகாச மிட்டாயி' படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.