‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கடந்த 2013ல் மலையாளத்தில் வெளியான 'ஆர்டினரி' என்கிற படம் சரிந்துகொண்டிருந்த குஞ்சாக்கோ போபனின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியதுடன், அதில் நடித்த பிஜூமேனனுக்கும் ஸ்டார் வேல்யூவை தந்தது. அறிமுக இயக்குனர் சுகீத் இந்தப்படத்தை இயக்கினார். அதை தொடர்ந்து வெற்றிப்பட கூட்டணியான சுகீத்-குஞ்சாக்கோ போபன் மீண்டும் மதுர நாரங்கா என்கிற ஆவரேஜ் ஹிட் படத்தை கொடுத்தனர். இப்போது மூன்றாவது முறையாக இவர்கள் புதிய படத்திற்காக கூட்டணி சேர்ந்துள்ளனர்.
நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் ஷிவதா நாயர்.. சினிமா பின்புலத்தை கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன் இடுக்கி பகுதியை சேர்ந்த இளைஞராக நடிக்கிறாராம். ஷிவதாவுக்கு ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஏஜெண்ட் கதாபாத்திரமாம். இதற்குமுன் இந்த கேரக்டரில் நடிக்க இருந்த சாந்தினிக்கு பதிலாக இவர் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த வருடம் ஷிவதா நடிப்பில் தமிழில் வெளியான அதே கண்கள், மலையாளத்தில் வெளியான லட்சியம் அச்சாயன்ஸ் ஆகிய படங்கள் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படியாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.