ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கைதி எண்150 படத்தை அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் படம் சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்ட வீரரின் கதையில் உருவாகும் இந்த படத்தில் சிரஞ்சீவியுடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜயசேதுபதி, நயன் தாரா உள்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். சுரேந்தர் ரெட்டி இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை சிரஞ்சீவியின் பிறந்த நாளன்று ராஜ மவுலி வெளியிட்டார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் முதல் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. அதனால் தற்போது ஐதராபாத்தில் ஏ.ஆர்.ரகுமான்-டைரக்டர் சுரேந்தர் ரெட்டி ஆகிய இருவரும் கம்போஸிங் வேலைகளை தொடங்கி விட்டார்களாம். மேலும், இந்த படத்தின் முதல்நாள் படப்பிடிப்பு ஒரு பாடலோடு தொடங்குகிறதாம்.