டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாளத்தில் தற்போது உருவாகி வரும் 'தரங்கம்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது மட்டுமல்ல, அதன் வித்தியாசமான உருவாக்கத்திற்காக ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. இப்போது இந்தப்படத்தின் முக்கிய மூன்று கேரக்டர்களின் போஸ்டர்களை தனித்தனியாக வெளியிட்டுள்ளனர். பப்பன்' என்கிற கேரக்டரில் கதாநாயகனாக நடிக்கும் டொவினோ தாமஸ், 'மாலு' கேரக்டரில் நடிக்கும் சாந்தி பாலச்சந்திரன் மற்றும் 'ஜாய்' என்கிற கேரக்டரில் நடிக்கும் காமெடி நடிகர் பாலு வர்கீஸ் ஆகியோரின் கேரக்டர்கள் தான் அவை.
இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் டொமினிக் அருண் என்பவர் இயக்கியுள்ளார். இது க்ரைம் கலந்த காமெடி படமாக உருவாகியுள்ளது. மலையாளத்தில் இந்தப்படத்தை தயாரித்திருப்பது நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தான்.. மலையாளத்தில் தனுஷ் தயாரிக்கும் முதல் படம் இது. வரும் செப்-29ல் இந்தப்படம் ரிலீசாக இருக்கிறது.