ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்துள்ள மகேஷ்பாபு, அதையடுத்து கொரட்டல்ல சிவா இயக்கத்தில் பாரத் அனி நேனு என்ற அரசியல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், அர்ஜூன் ஆகிய இருவரும் முக்கிய அரசியல் தலைவர்களாக நடிக்கிறார்கள். இப்படம் 2018-ம் ஆண்டு ஜனவரி சங்கராந்திக்கு வெளியாகிறது.
இந்தபடத்தையடுத்து வம்சி இயக்கும் படத்தில் நடிக்கிறார் மகேஷ்பாபு. இது அவரது 25வது படமாகும். படத்தில் அவருடன் நடிக்கும் நடிகர் - நடிகைகள் பற்றிய தகவல் இன்னும் வெளியிடப்படாத நிலையில், அவருக்கு ஜோடியாக ஏற்கனவே போக்கிரி தெலுங்கு படத்தில் நடித்த இலியானா மீண்டும் நடிப்பதாக செய்திகள் பரவிக்கொண்டிருக்கிறது.
இதையடுத்து அந்த படத்தை தயாரிக்கும் தில் ராஜூ வெளியிட்டுள்ள செய்தியில், மகேஷ்பாபுவின் 25-வது படத்தில் நாயகியாக நடிப்பது சம்பந்தமாக சில முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது. ஆனால் இலியானாவை அந்த படத்தில் நடிக்க வைக்க முயற்சிக்கவில்லை. அதனால் மகேஷ்பாபுவுடன் மீண்டும் இலியானா ஜோடி சேருவதாக வெளியான செய்தி வதந்தி மட்டுமே என்று மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.