டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழில் வெற்றிவேல், கிடாரி போன்ற படங்களில் நடித்தவர் நிகிலா விமல். தற்போது சிபிராஜூடன் ரங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் தற்போது அவர் இரண்டு படங்களில் நடிக்கிறார். அதில் ஒரு படம் மோகன்பாபு நடிக்கும் காயத்ரி. இன்னொன்று மெடா மீடா அப்பாயி. இந்த படம் மலையாளத்தில் வெளியான ஒரு வடக்கன் செல்பி படத்தின் ரீமேக் ஆகும்.
அல்லாரி நரேஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக நடித்திருக்கும் நிகிலா விமல், வருகிற 8-ந்தேதி இந்த படம் திரைக்கு வருவதை அடுத்து எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார். மேலும், தமிழ், மலையாள படங்களில் கிளாமர் அல்லாத வேடங்களிலேயே நடித்திருக்கும் நிகிலா, தெலுங்கிலும் அதே பாணியைத்தான் பின்பற்றுகிறாராம்.