தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மோகன்லால் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி 15௦ கோடி ரூபாய் வசூலித்து பாக்ஸ் ஆபீசில் கலக்கிய படம் தான் 'புலி முருகன்'.. அதுமட்டுமல்ல ஏற்கனவே மனமந்தா, ஜனதா கேரேஜ் ஆகிய படங்களின் மூலம் மோகன்லாலுக்கென ஒரு ரசிகர் வட்டமும் உருவாக்கி இருந்ததால், இந்தப்படம் தெலுங்கிலும் 'மான்யம் புலி' என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு 5௦ நாட்கள் ஓடியதுடன் சுமார் 12 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இந்தப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக சில மாதங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தெலுங்கில் ரிலீசானது தனிக்கதை..
இப்படி ஆந்திர, தெலுங்கானா தியேட்டர்களில் நல்ல வரவேற்பை பெற்ற 'மான்யம் புலி' படம் தெலுங்கு சேனல்களின் டி.ஆர்.பி யுத்தத்திலும் சாதனை செய்திருக்கிறது.. கடந்த சில தினங்களுக்கு முன் இந்தப்படம் 'மா' சேனலில் ஒளிபரப்பானது. அந்த வார டி..ஆர்.பி ரிப்போர்ட்டின்படி 11.5 ரேட்டிங்கையும் பெற்றது. இந்த வருடத்தில் தெலுங்கு சேனல்களில் ஒளிபரப்பான படங்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை கணக்கிடும்போது 'மான்யம் புலி' நான்காவது இடத்தை பிடித்துள்ளது.. ஒரு டப்பிங் படம் இந்த இடத்தை பிடித்துள்ளதால் இது சாதனையாக பார்க்கப்படுகிறதாம்.